ஓணம் திருநாளில் மக்கள் அனைவரும் சாதி, மத பேதங்கள் இன்றி ஒற்றுமையுடன் வாழ வாழ்த்து தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மகாபலி சக்கரவர்த்தியின் கோரிக்கையை ஏற்று திருமால் அருள் புரிந்த திருநாள் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில் வண்ண மலர்களால் கோலங்களிட்டு, புதிய ஆடைகளை உடுத்தி, ஆடல், பாடல், விளையாட்டு என உற்சாகமாக மலையாள மக்கள் விழாவை கொண்டாடுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சாதி, மத பேதங்கள் இன்றி இனிய நாளில் ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post