பாஜக மற்றும் எதிர்கட்சிகளுக்கு ஓம் பிர்லா பாலமாக செயல்படுவார் -மோடி

மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சிகளுக்கு பாலமாக விளங்குவார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

17வது மக்களவையின் சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவையில் பிர்லாவின் பெயரை பிரதமர் மோடி முன்மொழிய, மற்ற உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.

ஓம் பிர்லாவின் தேர்வையடுத்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, பிர்லாவை ஒருமனதாக தேர்வு செய்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் வளர்ச்சிக்காக கடின உழைப்பை அர்ப்பணித்தவர் ஓம் பிர்லா என்று தெரிவித்தார். ஓம் பிர்லாவின் அரசியல் என்பது பொது சேவைதான் என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஆளும் பாஜக அரசிற்கும் எதிர்கட்சிகளுக்கும் பாலமாக 100 சதவிகிதம் நடுநிலையுடன் அவர் செயல்படுவார் என்றும் கூறினார்.

Exit mobile version