சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்தார்!

நேற்று ஒடிசாவின் ஆளும்கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சரான நபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  ஜார்சுகுடா எனும் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு நபா தாஸ் கலந்துகொள்ள சென்றார். அப்போது பொதுமக்களுடன் மக்களாக கலந்து கொண்டிருந்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர்[ASI] கோபால் தாஸ் நபா தாஸை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். கிட்டத்தட்ட ஐந்து முறை சுட்டார்.

இதனால் நெஞ்சில் குண்டு பாய்ந்து, உயிருக்கு மோசமான நிலையில் அமைச்சர் நபா தாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரை சுட்ட கோபால் தாஸை போலிசார் கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டு உள்ளனர். சுடப்பட்ட அன்று ஏர் ஆம்புலன்ஸ் மூலம் புவனேஸ்வர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அமைச்சர் நபா கிஷோர் தாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த சம்பவம் ஒடிசா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்பு ஆகியத் தலைவர்கள் நபாதாஸ் இறப்பிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version