சென்னை கல்யாணபுரத்தில் 360 அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில், தி.மு.க. உறுப்பினர் சேகர் பாபுவின் கேள்விக்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கல்யாணபுரத்தில் கடந்த 1976-ல் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள 260 வீடுகளுக்கு மாற்றாக கூடுதலாக 360 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
400 சதுர அடியில் தலா 13 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அந்த பகுதிவாசிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல வி.ஆர்.கார்டன், க்ளே பேக்டரி பகுதிகளில் சாலையோரமாக வசிக்கும் ஆயிரத்து 500 பேர் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்களுக்கு பெரும்பாக்கம் குடிசை மாற்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.