முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் பேட்டி
ஒரு திருடனைத் திருடன் என்றுதான் சொல்ல முடியும். திருட்டுக் கும்பலைப் பற்றி பார்லிமண்டில் பேசுவது ஒன்றும் தவறில்லை. இருப்பதிலேயே வொர்ஸ்ட் திருடன் யாரோ அவரைப் பற்றிதான் நாடாளுமன்றத்தில் பேசுவார்கள். எனவே, திமுக ஒரு ஊழல் கட்சி என்பதை நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசியிருப்பதன் மூலம் இந்தியா முழுவதும் அதுவொரு திருட்டுக் கட்சி என்று வெளிப்பட்டுள்ளது. திமுகவினர் நம்பர் ஒன் திருடர்கள் என்பதை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் குறித்து..
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவுப்படுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். எங்களுக்கு இந்த விசயத்தில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் திமுகவினரே பெண்களை இழிவுப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். பெண்மையை இழிவுப்படுத்தும் திமுகவுக்கு 1991 ல் பாடம் புகட்டியவர் மறைந்த முன்னாள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
மீனவர் மாநாடு குறித்து..
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்து மீனவர்களை வஞ்சித்துவிட்டு, மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்கது ஏற்புடையதல்ல: மீனவர்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் மீனவர்களுக்கு சொல்லாணத்துயரம் உள்ளது. மீனவர்கள் அல்லாத சமூக விரோதிகள் வைத்து திமுக மாநாடு நடத்த உள்ளது. ரோம் நகர் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். விழா நாயகன் வைக்கலாம், ஆனால் சூட்டிங் அரசர் என்று வைக்கிறார்கள். அவருக்கு ஒரு மேனியா, எப்போது பார்த்தாலும் ரிமோட் பிடித்திருப்பது அவருக்கு ஒரு மேனியா போன்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல், சட்டம் ஒழுங்கை கடுப்படுத்தாமல் விழாவில் கலந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகிறார் ஸ்டாலின். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு தகுந்த பதிலை வழங்கினார்.\