ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு, நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்நிலையில், ஜெய்ப்பூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ரஃபேல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடி, ஒரு பெண்ணின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதாக நிர்மலா சீதாராமனை குறிப்பிட்டு விமர்சித்தார்.
இதனை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, ஒட்டுமொத்த பெண்களையும் ராகுல் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார். இதனிடையே, சர்ச்சை பேச்சு பற்றி விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் குறித்து பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அனந்த் சர்மா, இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விமர்சித்தார். சோனியா காந்திக்கு எதிராக சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பிரதமர் மோடி பலமுறை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post