மதுரை தொப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு, 222 ஏக்கர் நிலத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தரிசு நிலத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் மற்றும் கம்பி வேலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான முயற்சியில் விடியா திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமாநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 5வது மாடியில், கடன் வாங்கி மாணவ, மாணவிகள் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக செங்கல் மட்டுமே நட்டு வைத்திருப்பதாக வாரிசு அமைச்சர் விமர்சித்த நிலையில், ஆட்சிக்கு வந்த 18 மாதங்கள் ஆன நிலையிலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எவ்வித நடவடிக்கையும் திராணியற்ற திமுக அரசு எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இது மக்களுக்கான அரசா அல்லது வாரிசு அமைச்சருக்கான அரசா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
Discussion about this post