பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், விராட் கோலி மற்றும் மோடி இருவரும் தங்களது துறைகளில் ஆச்சரியப்படத்தக்க வீரர்கள் என்றும் அவர்களை எளிதில் வீழ்த்த முடியாது எனவும் கூறினார்.
மேலும், கொள்கைகள் இல்லாத, அல்லது தலைவரை பற்றிய நிச்சயம் இல்லாத கூட்டணியினரை தேர்வு செய்து, தற்கொலை செய்து கொள்ள எந்த நாடும் முன்வராது என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நிதிப் பிரச்சனை மற்றும் கடன் சுமை மத்திய அரசுக்கு இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு நாங்கள் எந்த மிரட்டலும் விடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்துள்ளார்.
உர்ஜித் படேலை ராஜினாமா செய்ய மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முந்தைய ஆட்சிக் காலத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் பலர் ராஜினாமா செய்துள்ளதாக கூறிய அருண் ஜேட்லி, ரகுராம் ராஜன் மற்றும் உர்ஜித் படேலுடன் சிறந்த உறவை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post