வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உட்பட அமைச்சர்களும், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Discussion about this post