பேச்சுவார்த்தையை மீறி ஏவுகணை சோதனை நடத்தி வட கொரியா அத்துமீறல்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது கொரிய தீப கற்பத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

நீண்ட தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுத சோதனை என்று வட கொரியா உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென் கொரியா, அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆயுத சோதனைகள் வட கொரியா நிறுத்தியது. இதனால், கொரிய தீப கற்பத்தில் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தி உள்ளது.

குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இரண்டு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை நடத்தி இருக்கிறது. இதுவரை கிழக்கு கடல் பகுதியில் வீழ்ந்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனையை வட கொரிய அதிபர் கிம் ஜாங் பார்வையிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version