2020ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், ஆண்ட்ரியா கெஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ரெய்ன்ஹார்ட் கென்செல் ஆகிய 3 பேருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
விருதின் பரிசுத் தொகையில் ரோஜர் பென்ரோஸ்-க்கு 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் அறிவித்துள்ளது. புதனன்று வேதியியல், 8ஆம் தேதி இலக்கியம், 9ஆம் தேதி அமைதி, 10ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது.