சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் தடுக்க, அரசு செயல்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் அமைச்சர் வேலுமணி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில், இந்த ஆண்டு 343 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளதாக தெரிவித்தார்.
சராசரியை விட 54 சதவிகிதம் மழை குறைவாக பெய்துள்ள போதிலும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
Discussion about this post