இன்று No Selfies Day… அப்படியென்றால் இன்றைக்கு செல்ஃபிகள் எடுக்கக்கூடாதா என்ன?

தூய தமிழில் தாமி என்றும் ஆங்கில சொல்வழக்கில் செல்ஃபி என்றும் அழைக்கப்படும் சுயப் புகைப்படமானது இன்றைய நவீன உலகத்தில் அதிகளவு மனிதர்களால் எடுக்கப்படுகிறது. அப்புகைப்படத்தினை அவர்கள் தங்களின் புலனம், முகநூல், சுட்டுரை, படவரி ஆகிய பலவற்றில் பதிவிடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கான பிரபல்யத்தினைத் தேடிக்கொள்கின்றனர். ஒரு ஆய்வு என்ன சொல்கிறது என்றால், தாமியினை அதிகளவு பெண்கள் தான் எடுக்கிறார்கள் என்று கூறுகிறது.

National No Selfies Day (March 16th) | Days Of The Year

ஒரு பெண் ஒருநாளைக்கு தாமி எடுப்பதற்கு செலவிடும் நேரமானது ஒரு மணி நேரம் மற்றும் 24 நிமிடங்கள் என்றும், அதுவே ஒரு வாரத்தில் 104 மணி நேரங்கள் செலவிடுகிறார்கள் என்றும் கூறுகிறது. இதனால் அவர்களின் வாழ்வில் நேரவிரயமானது ஏற்படுகிறது. மேலும் சிலர் வித்தியாசமாக தங்கள் புகைப்பட்த்தினை எடுக்க முயற்சி செய்து உயிருக்கு ஆபத்து விளைக்கும் செயலிழும் ஈடுபடுகின்றனர். எனவே இது குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்த உலகம் முழுவதும் இன்றைக்கு “நோ செல்ஃபீஸ் டே”  அனுசரிக்கப்படுகிறது.

Exit mobile version