தலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தலைமை செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். அவசர காரணங்களுக்காக விடுப்பு எடுத்திருந்தால் அதன் உண்மை தன்மை ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை காலை 10.15 மணிக்குள் பணிக்குள் வந்துள்ள ஊழியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று தலைமைச் செயலக துறை தலைவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வருகை தந்துள்ள பணியாளர்களின் விவரங்களை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.