கொரோனா நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை அதிகரிப்பு

மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல 108 அவசர ஊர்திகளின் 240லிருந்து 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் பாதிக்க கூடாது என சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதன் ஒருபகுதியாக நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 அவசர ஊர்தி மிகவும் உதவிகரமாக உள்ளது.

108 அவசர ஊர்திகள் தற்பொழுது 1,303 வாகனங்கள் தமிழகம் முழுவதும் இயங்கி வருகிறது. அதில் கொரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வந்த நிலையில் 351 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தினசரி சுமார் 5,200 நோயாளிகள் மாநிலம் முழுவதும் அவசர ஊர்திகள் மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக 2,500 கொரோனா நோயாளிகள் பயனடந்து வருகின்றனர்.

சென்னைக்கு 60 அவசர ஊர்திகளும், சென்னை புறநகர மாவட்டங்களான திருவள்ளூருக்கு 25, செங்கல்பட்டு -15, காஞ்சிபுரம் – 10 என மொத்தம் தமிழகம் முழுவதும் 351 அவசர ஊர்திகள் இயக்கப்படுகிறது.

கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பால், தேவைக்கேற்ப அவசர ஊர்திகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கோவிட் கண்ட்ரோல் ரூம் என்ற தனி கட்டுப்பாட்டு சேவையை அமைத்து 044 400 67 108 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மேற்பார்வையின் கீழ் தங்குதடையின்றி செயல்பட்டு வருகிறது.

Exit mobile version