நீதிபதிகளை மை லார்ட் , யுவர் லார்ட்ஷிப் என்று இனி அழைக்க வேண்டாம் என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் போது , நீதிபதிகளாக இருந்த வெள்ளையர்களை அழைக்கும்பொருட்டு , மை லார்ட் என்றும் , யுவர் லார்ட்ஷிப் என்றும் அழைக்கப்பட்டது. இது, எனது மேதமை தாங்கிய எஜமானரே என்று பொருள்படுவதாக இருந்தது. பல நீதிமன்றங்களில் இந்த வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில நீதிமன்றங்களில் இப்படி அழைக்கப்படுவது மரபாக உள்ளது. இந்நிலையில் இனி இவ்வாறு அழைக்க கூடாது என ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதன் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த உத்தரவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது
Discussion about this post