அதிகாலையில் சைக்கிளிங் செய்வது என்பது அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தைப் பேண வழிவகுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிலர் சைக்கிளிங் மட்டுமே செய்துகொண்டு மற்ற உள்விவாகாரங்களை கவனிக்க மறுக்கிறார்கள். அப்படி யார் யார் என்று ஒரு பட்டியல் எடுத்தால் பலர் இதில் சிக்குவார்கள். அவர்களிலும் குறிப்பாக ஒருவர் இருக்கிறார். காலையில் சைக்கிளிங் செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். பிறகு இளைஞர்களுக்கு அட்வைஸ் என்கிற பெயரில் பழைய பஞ்சாங்கத்தையே பேசுவார். அவர்தான் கூடிய சீக்கிரத்தில் ஓய்வுபெறப் போகும் டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள். இவரை நெட்டிசன்கள் சைக்கிள் ஏந்துகிற பாபு என்றுதான் மீம்ஸ்கள் போட்டு விமர்சிப்பார்கள்.
அப்படி பல சர்ச்சைகளுக்கு பெயர் போன சைலேந்திர பாபு, நேற்றைக்கு நடைபெற்ற அவரது பிரிவு உபச்சார விழாவில் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதாவது\
“கடந்த எட்டு மாதங்களாக தமிழகத்தில் லாக் அப் டெத்க்கள் எதும் நடக்கவில்லையாம்”
இதைக் கேட்ட அனைவருக்கும் ஷாக். என்ன இது இப்போதுதான், ஜூன் மாதத்தில் தென்காசியில் தங்கச்சாமி என்பவரை போலிசார் லாக் அப்பில் வைத்து அடித்து துன்புறுத்தி மரணமடையச் செய்தனர். இதற்கு முதல்வரோ பிற அமைச்சர்களோ எந்த ஒரு கண்டனமும், அறிக்கையும் கூட வெளியிடவில்லை. இப்படி ஒன்று நடந்தது கூடத் தெரியாமல் டிஜிபி இருக்கிறாரே? ஒருவேளை பணிகாலம் முடியும் தருவாயில் இருப்பதால் மறதி பீடித்துக்கொண்டதோ? என்று காவல்துறை வட்டாரங்களே தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்கின்றனராம்.
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஒரே ஆண்டில் எட்டு லாக்-அப் டெத்க்கள் நடந்தேறியிருக்கின்றன. தஞ்சாவூரில் சத்யவாணன், ராமநாதபுரத்தில் மணிகண்டன், சேலத்தில் பிரபாகரன், சென்னையில் விக்னேஷ், திருவண்ணாமலையில் தங்கமணி,
கன்னியாக்குமரியில் அஜித், தற்போது தென்காசியில் தங்கச்சாமி என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால் இதுவெல்லாம் நமது டிஜிபி அவர்களின் கண்ணிற்கு புலப்பட்டு இருக்கிறதா இல்லையா? சரி அவர் கூற்றின்படியே நாம் வருவோம். கடந்த எட்டு மாதங்களாக லாக்-அப் டெத்க்கள் நடைபெற வில்லையென்றால், அதற்கு முன் திமுக ஆட்சியில் லாக்-அப் டெத் நடைபெற்று உள்ளன என்பதை அவரே சாட்சியாகி ஒப்புக்கொண்டுவிட்டாரா? என்றும் கேள்வி நமக்குள் எழுகிறது.
பிரிவு உபச்சார விழாவில் கூடுதலாக இன்னொரு சர்ச்சைக்கு உரிய கருத்தையும் கூறியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.
“மிருகங்களைப் போன்று பலமில்லாதவர்கள் மனிதர்கள். மிருகங்களைக் கூட ஒத்துழைப்பு மூலம் கூண்டுக்குள்ளோ, மிருக காட்சி சாலைக்குள்ளோ அடைத்துவிடலாம்” என்று பேசியுள்ளார்.
அப்படியென்றால் மனிதர்கள் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள். விசாரணை என்ற பேரில் சிறைக்குள் அடைத்து அவர்களை துன்புறுத்தி வழிக்கு கொண்டுவரலாம். அதில் லாக்-அப்பிலேயே மரணம் எய்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்கள் என்று பொய்யாக திரித்து வழக்கை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா டிஜிபி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இந்த லட்சணத்தில் சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சியின் தலைவராக ஆக்க இருக்கின்றனர் இந்த விடியா கும்பல். ஏற்கனவே அரசுத் தேர்வுகள் நடத்த காலதாமதம், நடந்த தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிட தாமதம் என்று தேர்வர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. பச்சையாக பொய்சொல்லும் இந்த டிஜிபியை, எப்படி ஒரு நேர்மையான டிஎன்பிஎஸ்சி தலைவராக இருப்பார். டிஜிபி வேலையையும் ஒழுங்காக பார்க்கவில்லை. இப்படி வேலை பார்க்காத நபருக்கு டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவி என்ற விருதை முதல்வர் அளிக்கிறாரோ? என்று தேர்வர்களே பயப்படுகிறார்கள்.
இப்படி அலட்சியப்போக்குடனும், மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலும் செயல்படும் டிஜிபியையா இந்த விடியா திமுக அரசு நியமித்திருந்தது. இவருக்கு கீழேயே தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் நம்பியிருந்தனர் என்று அரசியல் செயல்பாட்டாளர்கள் விமர்சனம் செய்கின்றனர். அடப்போங்கப்பா, ஆளுகிறவரும் பொம்மை.. அதிகாரியும் பொம்மை.. இப்படி இருந்தால் தமிழ்நாடு என்று வீறுநடைபோடும். கடந்த பத்தாண்டில் வெற்றிநடைபோட்ட தமிழகம், இந்த மூன்றாண்டில் விடியலை நோக்காமல் விடியாமல் போய்க்கொண்டிருப்பதை நினைத்து சமூக வலைதளவாசிகள், “அண்ணே நீ பேசாம எதிர்க்கட்சியாவே இருந்திருக்கலாம்ணே” என்று அங்கலாய்க்கிறார்கள்.