அறிவிலி அரசுதான் விடியா திமுக அரசு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய அறிவிலி அரசுதான், விடியா திமுக அரசு என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்பநல நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் பி டீமாக செயல்பட்டு வரும் வைத்திலிங்கம், விளங்காத பிள்ளையாக மாறிவிட்டார் என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி, பன்னீர், வைத்திலிங்கம் ஆகியோர் பொய்க்கால் குதிரை எனவும் விமர்சித்தார். விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் கொளுத்துவிட்டனர் எனவும், அவர்களிடம் இருந்து சொத்துகளை பறிமுதல் செய்து, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கி அறிவிலி அரசுதான், விடியா திமுக அரசு என விமர்சித்தார்.பல்வீர்சிங் விவகாரத்தில் சிறப்பு விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்.-யை உள்துறை செயலாளராக நியமித்தால் விசாரணை அறிக்கை எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முற்றிலும் முரண்பட்ட முறையிலேயே விடியா அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுடன் இணைந்து போராட தயார் என திருமாவளவன் அறிவித்ததன் மூலம் திமுக கூட்டணியில் தொடர அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது என தெரிவித்தார்.

Exit mobile version