குடிநீர் வசதி இல்லாத எழும்பூர் மருத்துவமனை! கண்டுகொள்ளுமா விடியா அரசு!

எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

சென்னையிலுள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய எழும்பூர் அரசு மருத்துவமனையானது, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், உள்ளூர் வாசிகளும் அதிக அளவு இங்கு வந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் கடந்த பல மாதங்களாக, குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இங்குள்ள “ஆர்.ஓ” குடிநீர் குழாயானது பூட்டப்பட்டே கிடக்கிறது. அதில் குடிநீர் வராததால், பொது மக்கள் வெளியில் சென்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுடன், அவர்களது உறவினர்களும் பல நாட்கள் தங்க வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் குடிநீருக்காக நாள்தோறும் கணிசமான தொகையை செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இங்கு வருவோர் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இங்குள்ள சில கழிப்பறைகளும் பூட்டப்பட்டே கிடக்கின்றன.

இந்த மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் குப்பை நிரப்பி, கீழே சிதறுகின்றன. இவற்றை அப்புறப்படுத்தாததால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மருத்துவமனையிலுள்ள இதுபோலான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே எழும்பூர் மருத்துவமனையில், அதாவது எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை மேற்கொண்டு மருந்து உண்பதால்  தன்னுடைய குழந்தையின் கால்கள் செயலிழந்து போய்விட்டது என்று காவல் அதிகாரி கோதண்டராமன் சென்னை தலைமை செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டிருந்தார். இந்த செய்தி அன்றைக்கு தமிழகத்தில் பெரிய அதிர்வையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கு தமிழக சுகாதாரத்துறை பெரிய அளவில் அன்றைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு ப்ரஸ் மீட் மட்டும் கொடுத்திருந்தார். பிறகு தன் மகனுடன் வெளிநாட்டில் ஓட்டப்பந்தயம் ஓடுவதும் உள்ளூரில் யோகா போடுவதுமாக இருக்கிறார். ஆனால் இந்த அவலம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதனை இந்த விடியா அரசு கண்டுகொள்வதுபோல தெரியவில்லை.

Exit mobile version