புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாக கரையை கடந்த நிவர் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை மிரட்டி வந்த நிவர் புயல், புதுச்சேரி அருகே நேற்றிரவு 11.30 முதல் அதிகாலை 2.30க்குள் முழுமையாக கரையைக் கடந்ததுவிட்டதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிதீவிரமாக இருந்த நிவர், தீவிர புயலாக வலுவிழந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறும் எனவும், தற்போது நிவர் புயல் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மத்தியிலும், புதுச்சேரிக்கு வடமேற்கு திசையில் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post