தீவிர புயலாக மாறும் நிவர் புயல்!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த நிவர் புயலானது, இன்று தீவிர புயலாக மாறி, நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, நிவர் புயலாக உருவெடுத்து, 12 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற் பகுதிகளை நோக்கி நகர்ந்து, நாளை மதியம் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அவ்வப்போது 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது சென்னைக்கு 480 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.

Exit mobile version