நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்காளவை இடிக்கும் பணி தொடங்கியது

நிரவ் மோடிக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களாவை இடிக்கும் பணியில் மராட்டிய அரசு ஈடுபட்டுள்ளது.

மும்பைக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் ராய்கட் மாவட்டத்தின் கிகிம் கடற்கரையில், 33 ஆயிரம் சதுர அடியில், கருங்கற்களால் சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார் நிரவ் மோடி. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் விருந்துகள் இங்கு நடைபெற்று வந்தன. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதால், அந்த சொகுசு பங்களா சட்டவிரோத கட்டிடமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதனை இடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

நிரவ் மோடி பஞ்சாப் தேசிய வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நிலையில், இந்த கட்டிடத்தை வங்கி முடக்கி இருந்தது. பின்னர் முடக்கப்பட்ட சொத்துப் பட்டியலில் இருந்து பங்களாவை பஞ்சாப் தேசிய வங்கி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version