வட்டியுடன் சேர்த்து ரூ.7,200 கோடியை செலுத்த நிரவ் மோடிக்கு உத்தரவு

சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாயை வட்டியுடன் திரும்ப செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது நண்பரும் சேர்ந்து சட்ட விரோதமாக சுமார் 14 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை செய்து மோசடியில் ஈடுபட்டனர். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் சோக்சி மீது சிபிஐ-யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுப்பதற்கு முன், நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், மெகுல் சோக்சி ஆண்டிகுவா பார்புடா நாட்டிற்கும் தப்பி சென்றுவிட்டனர்.

இதையடுத்து இருவரையும் இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம், நிரவ் மோடியும், அவரது நண்பரும் கடந்தாண்டு ஜுன் மாதம் முதல் ஆண்டுக்கு 14.3 சதவீத வட்டியைச் சேர்த்து சுமார் 7 ஆயிரத்து 29 கோடியை ஒப்படைக்க வேண்டும் என்றும், அதேபோல், மற்றொரு உத்தரவில், நிரவ் மோடியும், அவரது நண்பர்களும் சுமார் 200 கோடியை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version