நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. மழை மற்றும் குளிர் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி, உதகை உட்பட மாவட்டம் முழுவதும் இடைவிடாமல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார் . நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 181மி.மீட்டர் மழையும். அப்பர் பவானியில் 110 மி.மீட்டர் மழையும் கூடலூரில் 109 மி.மீட்டரும் . தேவாலா பகுதியில் 76 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Discussion about this post