உலகை எடுத்துக்கொண்டால் தினந்தோறும் ஒரு சாதனை மனிதர்கள் உதித்துக்கொண்டேதான் இருப்பார்கள். நம் அனைவருக்கும் சாதனை மீது ஒரு அதீத ஆர்வம் சிறுவயதில் இருந்தே இருக்கிறது. அதிலும் கின்னஸ் போன்ற அரிய சாதனைகள் மீது அனைவருக்கும் தீராதக் காதல் ஒன்று உள்ளது. அப்படி கின்னஸ் சாதனை மீது தீராதக் காதல் கொண்டவர்தான் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான டெம்பு எபெரே.
அழுகுறதுல என்னயா கின்னஸ் சாதனை..!
வடிவேலு ஒரு திரைப்படத்தில் ”என்ன பெருசா அழுகுற என்ன விட்ட ஒரு நாள் பூராம் அழுவேன், அவ்ளோ அழுகையும் தேக்கி வச்சிருக்கேன்” என்று சொல்வார். அது மாதிரி தேக்கி வச்சு இருந்த ஒட்டுமொத்த அழுகையும் கொட்டி தீர்த்திருக்கிறார் நம்ம டெம்பு எபெரே. அப்படி அவர் எத்தனை நாளைக்கு அழுதார் தெரியுமா மக்களே. தொடர்ந்து ஏழு நாட்கள் அழுது இருக்கிறார். இதனால் அவருடைய கண்பார்வையே சிறிது நேரம் பாதிப்புக்கு உள்ளானது.