தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 2 இரவுகளுக்கு உறைபனி தொடரும் என்றும், உதகையில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியல் என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.