அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

அக்டோபர் முதல் வாரத்திலேயே தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க ஏதுவான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version