தூர்வாரும் பணி தொடக்கம் – நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தி எதிரொலி

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் முக்கிய தண்ணீர் திறப்பு பாசன வாய்க்கால் நியூஸ் ஜெ செய்தி எதிரொலியால் தூர்வாரும் பணி தொடங்கியது.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் தண்ணீர் திறப்பு வாய்க்காலாக ராதா மதகு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாசன வாய்க்கால் ஆகாயத்தாமரைகள், கருவேல மரங்கள், முட்புதர்கள் என சூழ்ந்து காணப்பட்டது.

10 கிலோ மீட்டர் நீளமுள்ள இராதா மதகு வாய்க்கால் மூலம் ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் முட்புதர்கள், ஆகாயத்தாமரை நிறைந்து சேதமடைந்து கிடக்கும் கால்வாயை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரித் தரவேண்டுமென நியூஸ் ஜெ செய்தியில் பேட்டி வாயிலாக தங்களது கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

விவசாயிகள் விடுத்த கோரிக்கை நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணியை துவக்கியுள்ளனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

கோரிக்கை விடுத்த செய்தியை பார்க்க

Exit mobile version