இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை மேல் சோதனை!

புது மெகா சீரியலே எடுக்கலாம் என்னும் அளவுக்கு கன்னித்தீவுக்கதையாகிப்போனது இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலப்பறைகள்… கைது செய்யப்பட்டு 90 நாட்களைக் கடந்தும் இன்னும் இன்னும் சோதனை மேல் சோதனை துரத்துகிறது செந்தில்பாலாஜியை…

அட அவருதான் புழல் சிறையில் ஹாயாக இருக்கிறாரே என்று கூட நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், இன்று சென்னை, புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்தி, மீண்டும் தன் சாட்டையை சுழற்றியிருக்கிறது அமலாக்கத்துறை… அதிலும் செல்போனில் ஃபோட்டோவை வைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் தெருக்களில், இவரைத் தெரியுமா என்று கேட்டு, அவர் வீட்டைத் தேடித் தேடிச் சென்று ரெய்டு செய்கிறது அமலாக்கத்துறை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று செந்தில்பாலாஜியே ஆடித்தான் போயிருக்கிறார் …

சரியாக 3 மாதங்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி வீடு,அவர் சகோதரர் வீடு, அலுவலகங்கள் என்று நடந்த சோதனை, தலைமைச்செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அமைச்சர் அறை வரை நீண்டது.. என்னென்னமோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்த நிலையில், கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, மருத்துவமனையில் தஞ்சம் புகுந்து பின்னர் புழல் சிறையில் தற்போது வாசம் செய்து வருகிறார்… அதுவும் இலாகா இல்லாத மந்திரியாக அரசுப் பணத்தையும் சம்பளமாக வாங்கிக்கொண்டு….

இந்தச்சூழலில்தான், பல்வேறு மர்ம முடிச்சுக்கள் அவரைச்சுற்றி வந்தன… புழல் சிறையில் தனி சாம்ராஜ்யம் நடத்துவது முதல், பைனாப்பிள் கேசரி சாப்பிடுவதுவரை பேசுபொருளானது… அட இதுக்கு இல்லையாப்பா ஒரு என்டு என்று அவரே கதறும் அளவுக்கு நெறுக்கப்பட்டார் .. அந்த விசாரணை நெருக்கத்தால் நொறுங்கிப்போனவர் என்னசெய்வதென்றே தெரியாமல் வாடிப்போய் இருக்கிறார் போல என்று சமீபத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, உச் கொட்டினார்கள் அவரின் ஆதரவாளர்கள்..

ஆனால் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாருப்பா இவரு … ரொம்பபபபப நல்லவரா இருப்பாரோ என்று யோசித்தபடியே, நீ எப்படி வேணாலும்போல, ஆனா, என்னைய எப்டியாச்சும் காப்பாத்தீருப்பா என்னும் வடிவேலு டயலாக் போல கணக்குப்போட்டுக்கொண்டிருந்த திமுகவினருக்கு தற்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாரோ செந்தில்பாலாஜி என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்…

அதாவது, அமலாக்கத்துறை விசாரணையில், தான்செய்த பல ஊழல்களையும் ஒப்புக்கொண்டதோடு, திமுக ஆட்சியில் டாஸ்மாக் அமைச்சராக இருந்தபோது அவர் செய்த தில்லாலங்கடிகளையும் சொல்லிவிட்டாரோ என்ற அச்சத்தை திமுகவின் மேலிடத்திற்கு கொடுத்திருக்கிறது இந்த ரெய்டு…

ஆக, செந்தில்பாலாஜியை விடாது துரத்தும் ரெய்டால் கதிகலங்கியிருப்பது செந்தில்பாலாஜி மட்டும்தானா? அல்லது ஸ்டாலின் குடும்பமா? அல்லது ஒட்டுமொத்த திமுகவுமா? ஒருவேளை செந்தில்பாலாஜி, திமுக செய்த ஊழல்களை பட்டியலிட்டிருந்தால், என்னவெல்லாம் நடக்கும்? இன்னும் யார் யார் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டப்போகிறதோ அமலாக்கத்துறை என்ற அச்சத்தில் இருப்பது யார்? சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி வாய்திறக்கும் நாளில் திமுக ஆட்சி வீட்டுக்குப்போவது மட்டும் உறுதி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 

Exit mobile version