கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 300கோடி ரூபாய் செலவு செய்து பீகாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோர் டீம் செய்த விளம்பரங்களால் ஆட்சியைப் பிடித்த திமுகவின் கதை ஊர் அறிந்ததுதான்.. ஜெயித்து முடிந்ததற்கு பிறகும், அந்த டீமுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் திமுக உள்ளாட்சி தேர்தலிலும் தில்லுமுல்லுகளை செய்து ஜெயித்தது… அதே வியூகத்தை தற்போது மீண்டும் தூசு தட்டி எடுத்திருக்கிறது திமுக…
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இந்தியா கூட்டணி என்ற பெயரில் நடக்கும் காமெடியில் எப்படியாவது பிரதான இடம் பிடித்துவிட வேண்டும் என்று லாபி செய்யத் தயாராகிவிட்டது திமுக. அதிலும் குறிப்பாக, நான் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று தானே சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் ஒரு புது யுக்தியை கையில் எடுத்திருக்கிறார்.. தனக்கு முதலமைச்சர் பதவி வாங்கித்தந்த பிரசாந்த் கிஷோரை மீண்டும் அணுகி, தேசிய அரசியலில் தனக்கான இடம் பெற்றுத்தர டீல் போட்டிருக்கிறார்.. இதையெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும் ? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது…
நேற்று பிரசாந்த் கிஷோர் பேசியதை நீங்கள் கேட்டிருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு எழுந்திருக்காது.. அப்படி என்ன தாங்க பேசினார் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள் அதையும் சொல்கிறோம்… இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.. இதென்னப்பா இது, புது உருட்டால்ல இருக்கு…
ஏற்கனவே, மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் பல கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பதிலேயே பல பிக்கல் பிடுங்கல்கள் இருக்கும் சூழலில், தற்போது ஸ்டாலின் தன்னை முன்னிருத்துவது கூட்டணியையே அசைத்துப்பார்க்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய அளவில் கூடியிருக்கும் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க ஸ்டாலினை பிராசாந்த் கிஷோர் முன்னிருத்துவது ஏன்? ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலுக்காக பிரசாந்த் கிஷாருக்கு 300 கோடி ரூபாய் கொடுத்திருந்த திமுக, தற்போது எத்தனை கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்து அவரை பேச வைத்திருக்கிறது? கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் என்ற பேச்சு எழுந்தால், மல்லிகார்ஜீன கார்கே, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், உள்ளிட்டோரின் எதிர்வினை எப்படி இருக்கும்?
ஸ்டாலினை ஏற்க மறுக்கும் மற்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பால், உருவாகும் முன்னரே உடையத் தயாராகிவிட்டது I.N.D.I.A கூட்டணி என்பதுதான் நிதர்சனமான உண்மை.