வீக்கெண்ட் முடிந்து, திங்கள் காலை பரபரப்புடன் இயங்கிய அனைவரையும் ஒரு நிமிடம் நிறுத்தி திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு என்னும் அதிரடி செய்தி.
((திரைப்படத்தில் வரும் சீன் போல பழைய பேஷண்டை தூக்கிவிட்டு புதிய பேஷண்ட் பொன்முடியை தூக்கி அட்மிட் பண்ணு என்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் ஆகியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி.,….))
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு உட்பட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது செம்மண் குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினரான ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், ஏற்கனவே அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாகவும் தற்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அவருடைய வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்முடி வீட்டில் லட்சக்கணக்கான ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், அமலாக்கத்துறை வைத்துள்ள செக்கால், பொன்முடியும் அவரது மகனும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றே சொல்லப்படுகிறது….
அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக அமைச்சர் பொன்முடி கைதாவாரா?
அமலாக்கத்துறையால் அமைச்சர் பொன்முடி வீட்டில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தொடர் ரெய்டுகளால் ஸ்டாலின் தனது தூக்கத்தை தொலைத்து தவிப்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.