தமிழ்நாட்டு மக்கள் கத்திரி வெயிலில் வாடி வரும் நிலையில், மின்வெட்டு பிரச்சனை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது… மக்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கும் விடியா அரசின் மின்வெட்டு குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
பிரிக்க முடியாதது எதுவோ?
திமுக ஆட்சியும் – மின்வெட்டும்
திருத்த முடியாதது எதுவோ?
திமுக ஆட்சியில் மின்சாரத்துறையும் – அதன் அமைச்சரும்
கிடைக்கவே கிடைக்காது எதுவோ?
திமுக ஆட்சியில் கரண்டு…
இப்படி, ஒட்டுமொத்த திமுக ஆட்சியின் அவலத்தை ஒரே மீம்-ல் சொல்லிவிடலாம்… அந்த லட்சணத்தில்தான் இருக்கிறது இந்த விடியா ஆட்சியும் அதன் நிர்வாகமும்..
((வெயிலின் கொடுமைகளுக்கு பயந்த காலம்போய், இந்த விடியா ஆட்சியில் மின்வெட்டு வந்துவிடுமே என்று பயப்படுகிற காலத்தில்தான் இருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். 100, 105 என்று நாளுக்கு எகிரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது என்றால், கரண்டை கட்செய்து, எரிச்சலூட்டுகிறது இந்த விடியா அரசு.. ))
ராத்திரியான போதும் கரண்டு கட் பண்ணி வுட்ருவாங்களே… தகதகன்னு எரியுது இந்த நேரத்துல மனுசனுக்கு ஒரு ஃபேன் போட முடியுதா? அடியே மாலா ஃபேன பன்னண்டா நெம்பர்ல வை என்று வடிவேலு கணக்காக புலம்புத்தவிக்கும் நேரத்தில் ஃபேனே போட முடியவில்லை என்றால் எப்படி இருக்கும் எரிச்சல்??? அந்த எரிச்சல் எல்லாம் இந்த விடியா அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும்தானே?
மின்வெட்டால் ஆட்சியை இழந்த கட்சி இந்தியாவில் இருக்கிறது என்றால் அது திமுக தான் என்பது சின்னக் குழந்தைக்கு கூட தெரியுமே…. நாஜிப்படைகளை விட மின்வெட்டால் மக்களை டார்ச்சர் செய்து எரிச்சல்மூட்டிய, வாழ்வாதாரத்தை இழக்கவைத்த 2006 – 2011 திமுக ஆட்சிக்காலத்தை அவ்வளவு சுலபமாக மறந்து விடுவார்களா மக்கள்? அன்றைய திமுக மின்சாரத்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமியே தங்களது ஆட்சிபறிபோனதற்கு முக்கிய காரணம் மின்வெட்டு தான் என்று ஒப்புக்கொண்டதே சாட்சி…. இவ்வளவு நாள் திமுகவினரால் ஸ்டாலின் தான் தன் தூக்கத்தை தொலைத்தார்.. இன்று மக்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு நிற்கின்றனர்.. ஏதோ அதிமுக ஆட்சியில் ஆசுவாசமாய் இருந்த மக்கள் இன்று மீண்டும் நடுராத்திரிகளில் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர்…. காத்து வாங்குவதற்காக.
கடந்த அதிமுக ஆட்சியின் போது மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டிய புரட்சித்தலைவி, அண்டை மாநிலங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து தரும் அளவிற்கு பொற்கால ஆட்சியை கொண்டு வந்தார்….புரட்சித் தலைவியின் வழியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி ஆட்சியிலும் மின்சார விநியோகம் தங்குதடையின்றி இருந்தது…
ஆனால், தற்போது கோடைகாலத்தில் ஏற்பட்டிருக்கும் மின்வெட்டைப்பற்றிக் கேட்டால், தமிழகத்தில் மின் தேவை அதிகரித்து இருப்பதாகவும், 4000 மெகாவாட்டிற்கு மேலே கூடுதலாக மின் உற்பத்தி தேவைப்படுவதாகவும் உருட்டியிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி…. கோடை வெப்பத்தை தணிக்க ஃப்ரிட்ஜ், ஏர் கூலர்களையும், ஏசி, ஃபேன் ஆகியவற்றை அதிகளவு உபயோகிப்பதால் தான் மின்சார தேவை அதிகரித்து இருப்பதாக மக்கள் மீதே பழிபோட்டு இருக்கிறார் செந்தில்பாலாஜி….
கோடை காலத்தில் மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திரிந்தும் தடையின்றி மின்சாரம் தர நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொளுத்தும் சூரியன்மீதே பழிபோட்டு தப்பிக்கப்பார்க்கிறதா சூரியக்கட்சி? மக்களின் எரிச்சலை குறைக்க இனியாவது ஏதாவது செய்வாரா செந்தில் பாலாஜி? என்பதுதான் தூக்கத்தை தொலைத்த ஒவ்வொரு மக்களின் கேள்வியும்.