கள்ளச்சாராயம் அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த குறித்தும், கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று பதவி விலகுவாரா பொறுப்பற்ற முதல்வர் ஸ்டாலின் என எதிர்க்கட்சி தலைவர் பேசியது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வேண்டுமா? உடனடியாக மரக்காணத்திற்கு போங்க, ஒரு கிளாஸ் கள்ளச்சாராயம் வாங்குங்க, மொடக்கு மொடக்குன்னு குடிங்க, உயிர விடுங்க… உடனடியா 10 லட்சம் ரூபாய அரசு தூக்கிக்கொடுக்கும்… வாங்கிட்டு போங்க….
இப்படி எல்லாருமே மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்… 10க்கும் அதிகமானோர் உயிரிழப்பு… பலருக்கு கண்பார்வை பறிபோனது…. 60க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி… இந்த நொடி வரைக்குமான அப்டேட் தான் இது… இன்னும் எத்தனை உயிரிழப்புகள் வேண்டுமானாலும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது… இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கதிகலங்க வைப்பதற்காகத்தான் மாங்குமாங்கென்று ஓட்டுப்போட்டு முதல்வர் ஆக்கினார்களா ஸ்டாலினை?
விடியா திமுக அரசு பொறுபேற்றது முதல் மரக்காணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்க துவங்கியது பற்றி ஏற்கனவே எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.. ஆனால் கிஞ்சித்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் கஞ்சா 2.ஓ 3.ஓ லாம் பன்றோம் என்று ஓ போடுவதை மட்டுமே தன் ஒரே பணியாக வைத்திருக்கும் ஸ்டாலினை எதிர்க்கட்சித்தலைவர் வெளுத்து வாங்கியதால், குடுகுடுவென்று ஓடிச் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்துவிட்டேன்… ஆறுதல் சொல்லிவிட்டேன்… என்று சீன் போட்டிருக்கிறார் முதல்வர்… இதையெல்லாம் என்னவென்று சொல்ல…
அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும், காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கள்ளச்சாராய வியாபாரிகளிடம் போலீசார் கமிஷன் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதால், இன்று இத்தனை பேரை இழந்துகொண்டிருக்கிறோம்..
இது ஒருபுறம் என்றால் போலி மதுவால், செங்கல்பட்டு மதுராந்தகத்தில் உறவினர்கள் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளனர்… டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் மதுவிற்பனை … அதே அளவுக்கு போலி மதுமானம் …. டன் கணக்கில் கஞ்சா புழக்கம் என்று மக்களுக்கு சீறும் சிறப்புமான பல திட்டங்களை சொல்லாமல் செயல்படுத்தியிருக்கிறார் ஸ்டாலின்… போதைப்பொருட்கள் ஆறாய் ஓடுகிறது. விளைவு… கொலை,கொள்ளை நாள்தோறும் அரங்கேறி வருகிறது… இதெல்லாம் கண்டுகொள்ளாமல் எந்த ஜிம்மில் எந்த வொர்க் அவுட் பண்ணலாம்? எத்தனை கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிங் போகலாம்? யாருடன் டீ குடிக்கலாம்? எங்கு போட்டோஷீட் செய்யலாம்? என்பதையே முழு நேர வேலையாக இருக்கும் முதல்வரை, பொம்மை என்று எதிர்க்கட்சித்தலைவர் சொல்வதில் என்ன தவறு?
ஆக, போலி மதுபானத்தை தடுக்கத்தவறிய அமைச்சர் செந்தில்பாலாஜி உடனடியாக ராஜினாமா செய்வாரா? கள்ளச்சாராயத்தை தடுக்கத்தவறிய முதல்வர் ஸ்டாலின் தார்மீகப் பொறுப்பேற்று எப்போது பதவிவிலகப்போகிறார்? என்று எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பிய கேள்விக்கு வலுசேர்க்கும் விஷயங்கள்தான் இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பேசுபொருள்.