இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! வாக்குறுதி 177ஐ நிறைவேற்றுமா அரசு! உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்!

டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் பணி நியமனம் வேண்டி கடந்த 5 நாட்களாக  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது அவர்கள் போராட்டத்தினை வாபஸ் பெற்றுவிட்டனர். ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த திமுக அரசு மறந்து விட்டது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வருவதற்காக தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களின் பணிக்காக திமுக அரசில் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது.

பணி நியமனம் வேண்டியும், போட்டித்தேர்வு எழுத வேண்டும் என்கின்ற அரசாணையையும் ரத்து செய்ய வேண்டியும் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் முன்பு கடந்த 5 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மாணவர்களுக்கு சிறந்த முறையில் பாடம் கற்பிப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2013ல் நடந்த TET தேர்வில் சுமார் 30,000 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் 10,000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

காலிப்பணியிடங்கள் இல்லாததால், மற்றவர்கள் தங்களது பணி நியமனம் வேண்டி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் இப்படி காத்திருப்போர், கால மாற்றத்துக்கேற்ப தகுதி தேர்வு எழுத அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர்களுக்கு திமுக ஆதரவுக்கரம் நீட்டியது. அதுமட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலின்போது, டெட் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெறாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும் என்றும் வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தும் தான் அளித்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றதாதால், இன்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டிருப்பதால் மிகுந்த அச்சமும் நிலவுகிறது.

அன்று ஆதரவுக்கரம் நீட்டிவிட்டு இன்று நம்பிக்கை துரோகம் செய்கிறாரா ஸ்டாலின்?

வாரிசுகளை அமைச்சரவைக்கு கொண்டு வருவதில் அக்கறை காட்டும் ஸ்டாலின் வாழ்வாதாரத்துக்காக தவிக்கும் டெட் தேர்வு எழுதிய ஆசிரியர்களை புறக்கணிப்பது ஏன்?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆதரவு கொடுப்பது, அதுவே ஆளும்கட்சியானதும் அவர்களை அம்போ என்று தவிக்கவிடுவது என்று ஸ்டாலின் இரட்டை முகம் காட்டுவது ஆசிரியர்கள் விவகாரத்திலும் அம்பலமாகி உள்ளது என்கிறார்கள் போராட்டக்களத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்.

Exit mobile version