அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 69வது பிறந்த நாளை கழக ரத்தத்தின் ரத்தங்கள் திருவிழா போல கொண்டாடுவது குறித்தும், கிளைக்கழக செயலாளராக தொடங்கிய அரசியல் பிரயாணம் கழக பொதுச்செயலாளர் வரை உயர்ந்தது எப்படி? என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
இரும்பு தேசத்து கரும்பு மனிதர், சேலம் தந்த மாங்கனி, புரட்சித்தலைவியின் உண்மையான வாரிசு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளை தங்கள் வீட்டு விஷேஷமாக நினைத்து ஒட்டுமொத்த அதிமுகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது … புரட்சித்தலைவர்,. புரட்சித்தலைவிக்குப் பிறகு இவ்வளவு மக்கள் திரளின் ஆதரவைப் பெற்ற ஒரே தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தான் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடுமே வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மாபெரும் தொண்டர் படை அவர் பின்னால் நிற்கிறது. வாழ்த்துச்சொல்ல அவர் வீட்டின் முன்னால் நிற்கிறது.
ஏன் இத்தனை கொண்டாட்டங்கள்? எதற்காக இவ்வளவு கூட்டம்?
தனக்குப்பின்னாலும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் மக்களுக்காக உழைக்கும் என்று சொன்ன புரட்சித்தலைவியின் பொன்னான வாக்குறுதியை நிறைவேற்றிடவும், தாயை இழந்த தமிழகத்தை தலைமகனாய் நின்று காத்திடவும் கழகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் எடப்பாடி கே பழனிசாமி.
தான் ஏறும் மேடைகளில் எல்லாம் கடைக்கோடி தொண்டன் வரை கழகத்திற்கு விசுவாசியாக இருந்தால் எவ்வளவு உயர் பொறுப்புகளெல்லாம் கிடைக்கும்? என்று உணர்வு பொங்க அவர்களின் முன் உரை நிகழ்த்தும் இந்த எதார்த்த பேச்சுத்தான் இன்று வரை அவரை தொண்டர்களின் மனதில் நிலைநிறுத்தி வைத்துள்ளது.
ஒரு சாதாரண தொண்டன் கூட ஒன்றரை கோடி அதிமுகவினருக்கு தலைமை ஏற்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டிய கழகத்தின் உண்மை விசுவாசியான எடப்பாடி கே பழனிசாமியை உள்ளத்தில் தாங்குகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
வயலில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ஒருவர் எப்படி அணைகளின் தண்ணீர் திறப்பு குறித்து முடிவெடுக்கும் இடத்திற்கு வந்தார்? கிளைக்கழக செயலாளராக இருந்தவர் எப்படி அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொதுச்செயலாளர் ஆனார்? வரலாறு எல்லாம் வரலாறு.
சிலுவம்பாளையத்தில் பிறந்து சிம் எம் ஆனதும் வரலாறு … குடும்ப வாரிசுகள் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டு அரசியலில் இதோ 3 மாதம், அதோ 6 மாதம் ஆட்சியைக் கலைக்கிறோம் என்று கம்பிகட்டும் கதை சொன்ன திமுக பூச்சாண்டிகளை லெப்ட் ஹேண்ட்டில் டீல் செய்து அசால்ட்டாக ஆட்சியை நிலைத்து நிற்கவைத்தவர்..
ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்த ஏழைப்பங்காளன், மன்னர்கள் செய்த குடிமராமத்துப் பணிகளை 1000 ஆண்டுகளுக்குப்பிறகு மனதார செய்த குடிமராமத்து நாயகன்.. காவிரியில் உரிமைகளை மீட்ட பொன்னியின் செல்வி புரட்சித்தலைவியைப்போல, டெல்டாவை பாதுகாத்த காவிரிக்காப்பாளன்…. இப்படி இவரது சாதனைகளைப் பட்டியலிட்டால் இதுபோல ஓராயிரம் நிகழ்ச்சிகளை நிகழ்த்தவேண்டியிருக்கும்.
இப்படி இவரது சாதனைகளைப் பட்டியலிட்டால் பல மாதங்கள் பேசிக்கொண்டேதான் இருக்க வேண்டிவரும்.. சொல்லைவிட செயலால் அதிரவைக்கும் கழகத்தின் பொதுச்சசெயலாளருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லி மகிழ்கிறது நியுஸ் ஜெ தலையங்கம்.