இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட கெட்டதை தைரியாமக செய்தோம் என்று ஒப்புக்கொண்ட ஸ்டாலின்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது கெட்டதைக் கூட தைரியமாக செய்தோம், ஆளுங்கட்சியானவுடன் நல்லதை செய்ய பயமாக உள்ளதாக சொல்லி முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

“எதிர்க்கட்சியாக இருந்த போது கெட்டதைக் கூட தைரியமாக செய்தோம்”:
“ஆளுங்கட்சியானவுடன் நல்லதை செய்ய பயமாக உள்ளது”
ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் செய்த கெட்டவை என்ன?
செய்வதற்கு அஞ்சும் நல்லவை என்ன?

திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி பேச மைக்கை பிடித்த முதல்வர் ஸ்டாலினிடம் ”நீங்க எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் தலைவரே” என்று அமைச்சர் காந்தி கூறியதை கேட்ட பின் அதனை அப்படியே மேடையில சொல்லிவிட்டு, சிரிச்சுட்டே இருக்குற மாதிரி நீங்க நடந்துக்கனும்… அதுதான் நான் உங்களுக்கு வைக்குற வேண்டுகோள் என்று புலம்பி இருக்கிறார்..

திமுக செயற்குழு கூட்டத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை, என்னை தூங்கவிடாமல் செய்கின்றனர் என்று கட்சி நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் பற்றி புலம்பியதன் தொடர்ச்சிதான் இது… தயவு செய்து நான் சிரிப்பது மாதிரி நடந்துகொள்ளுங்கள் என்று ஸ்டாலின் மறைமுகமாக தொண்டர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவே இதனை பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஆனால் அன்று தனக்கு தூக்கிமில்லை என்று ஸ்டாலின் புலம்பியதை உடன்பிறப்புகள் கைதட்டி சிரித்து ரசித்தது போல இன்றும் சிரித்து சில்லறையை சிதறவிட்டனர். இதனை பார்த்த பின் முதல்வர் ஸ்டாலின் சிரித்தது, இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக உபிக்கள் உள்ளதை நினைத்து மன உளைச்சலில் ஸ்டாலின் உள்ளார் என்பது தெளிவாகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….

இந்த நிகழ்ச்சியில் இதற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதுதான் ஹைலைட்டே!…. எதிர்கட்சியாக இருக்கும் போது தப்பைக்கூட தைரியமா செய்தோம்…ஆனால், தற்போது ஆளுங்கட்சி ஆனவுடன் நல்லதை செய்ய யோசித்து யோசித்து தயங்கி செய்யவேண்டி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார்..

அட, நம்ம முதல்வர் ரொம்பபபபப நல்லவருப்பாஆஆஆஆ…. இவ்வளோ உண்மையா பேசுறாரே… என்று கல்யாணத்தை காண வந்தவர்களெல்லாம் பூரிப்படைந்தனர்… இப்படி, தன்னைப்பற்றியும் தன் கட்சியை பற்றியும் வெளிப்படையாகப் பேசி, சமூக வலைதளங்களில் கண்டெண்ட் ஆகியிருக்கிறார் நம்ம முதல்வர்….

இணையத்தில் இது தொடர்பாக வீடியோ மற்றும் வெப் கார்டுகள் வைரலாகிய சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் யூடியூப் சேனல், அவரின் டிவிட்டர் பக்கம் என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அவர் புலம்பிய சில முக்கிய வரிகள் மட்டும் காணாமல் போய் இருக்கிறது…

எதிர்க்கட்சியாக இருந்தபோது தப்பைக்கூட தைரியமா செய்தோம் என்று கூறியிருப்பதன் மூலம், 2021க்கு முன்னர் திமுக செய்த தவறுகளை தானே ஒப்புக்கொள்கிறாரா ஸ்டாலின்? அவர் செய்த தவறுகள் என்னென்ன? எதைப் பற்றி கூறி இருக்கிறார்? அன்று கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதைப் பற்றி நினைவு கூர்ந்தாரா? அல்லது அன்று ஆட்சியில் இருந்த அதிமுக மீது அவதூறு கிளப்பிவிட்டதை நினைத்து கூறினாரா?…தற்போது நல்லது செய்ய அச்சமாக இருக்கிறது என்று கூறுவதன் மூலம், மக்களுக்கு நல்லது செய்ய, யாரைக்கண்டு, எதற்காக, ஏன் பயப்படுகிறார் ஸ்டாலின்? என்ற கேள்விகளெல்லாம் இனி எழும்… அதை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் மீண்டும் தூக்கமின்றி தவிக்கப்போகிறார் ஸ்டாலின் என்பது மட்டும் உறுதி.

Exit mobile version