4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை சென்னை. இந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் சென்னை மேயர் ப்ரியா மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர் சென்னை மக்கள்… எப்போதும் மக்களை சோதிக்கும் இந்த சென்னை வெள்ளத்திற்கு எப்போதுதான் கிடைக்கும் விடியல்? என்று அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
யப்பப்பா… எறியற வெயில் எப்படா முடியும்? வெக்கை தாங்கல… உக்காரக்கூட முடியல… மழைய பாக்க மாட்டோமா என்று வானம் பார்த்த பூமியாக கிடந்த சென்னையை வருண பகவான் குளிர்வித்த பிறகு, ஐயையோ… மழையே வேணாம் பா என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர் சென்னைவாசிகள்..
நம்மைக் குளிர்விக்க வந்த மழையை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை குளம் போல தேங்கி நிற்கும் தண்ணீருக்குள் விழுந்துவிடாமல் பத்திரமாய் இருப்பது எப்படி என்று கவலைப்படுவதா? என்னடா இது சென்னைகாரங்களுக்கு வந்த சோதனை …
கொட்டித்தீர்க்கும் மழைநீர், வடிந்துவிடாமல், கட்டிப்பிடித்து உறவாடிக்கொண்டிருக்கிறது சென்னை சாலைகள்.. இப்படி ஒரு மழைக் கவிதையா என்று சமூகவலைதளங்களில் பூரிப்படைந்தாலும், வீட்டை விட்டு வெளியே வந்தால் சாலைகளில் தோன்றியிருக்கும் திடீர் நீச்சல்குளங்கள், நம்மை நீக்கமற ஆட்கொண்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு சென்னைவாசிக்கும் உள்ளூர இருக்கிறதுதான்…
வழக்கமாக டிசம்பரில்தானே இந்த திடீர் ஸ்விம்மிங் பூல்கள் தோன்றும்,… இது என்ன ஒரு நாள் மழைக்கே அதுவும் ஜூன் மாதத்திலேயே இப்படி இம்சிக்கிறது இந்த மழை என்று மழையை கடிந்து கொள்ள வேண்டாம்.. சென்னையின் இந்த நிலைக்கு காரணம் சாட்ஷாத் இந்த விடியா அரசுதான்..
சென்னை மாநகராட்சியில் 4ஆயிரத்து70 கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 33 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. இதில்,80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன என்று ஏற்கனவே கூறியிருந்தால் சென்னை மேயர் பிரியா… மீதமுள்ள பணிகளும் வெகுவிரைவில் முடிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.. ஆனால்,. ஒரு நாள் மழைக்கே தாங்காமல் டார் டாராகிக் கிடக்கிறது சென்னை … இருக்கிற சுரங்கப்பாதைகளில் முக்கால்வாசிக்கும் மேலாக தண்ணீரில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன… ஆனால், கொஞ்சம் கூட நாக்கூசாசமல், அப்டிலாம் எங்கையும் தண்ணி தேங்கவே இல்லையே என்று கூறுகிறார் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.. அப்போ இதுலாம் என்னங்கையா???
சரி சென்னையில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்றால், பிறகு எதற்கு 2000 பேரை வேலைக்கு அனுப்பிருக்கிறோம், எல்லா வேலையும் முடித்துவிட்டோம் என்று கதை அளந்து விட்டிருக்கிறார்?
இதுஒரு புறம் என்றால், சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் எல்லோம் வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கின்றனர் என்ற செய்திதான் சென்னை மக்களை மேலும் எரிச்சலடைய வைத்திருக்கிறதே.
ஆக, 4ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொண்டும் ஒரு நாள் மழைக்கே ஏன் தாங்கவில்லை சென்னை? இன்னமும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஏன் முடிக்கவில்லை இந்த விடியா அரசு? வெளிநாடு சுற்றுலாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சென்னைக்கு கொடுப்பாரா மேயர்? சென்னை வெள்ளத்திற்கு எப்போது கிடைக்கும் விடியல்? என்பன போன்று கேள்விகளுக்கு விடையே கொடுக்கக்கூடாது என்பதுதான் இந்த விடியா அரசின் ஒரே கொள்கை.