அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கட்டம் கட்டப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கே அச்சுறுத்தலாக இருக்கப்போகும் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் இதுவரை தமிழ்நாடு அரசியல் வரலாறு காணாத அளவுக்கு ANTI-INCUMBENCY என்று சொல்லக்கூடிய அரசுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள்.. டாஸ்மாக் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கைது இந்தப்பெருமைக்கு கிரீடம் வைத்தார் போல ஆகியிருக்கிறது.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்து திமுக வட்டாரமே கதிகலங்கி இருப்பதன் பின்னணியில் 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ஆடியோ உள்ளிட்ட பல திடுக்கிடும் உண்மைகள் இருப்பதாக தகவல்கள் உலவும் நிலையில், அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.
அமைச்சர் பிடிஆர் பேசிய 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக, வாரிசு அமைச்சர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரை அடுத்தகட்டமாக, கட்டம் கட்ட அமலாக்கத்துறை முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதாக அமலாக்கத்துறையில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
நிதியமைச்சராக இருந்தபோது இந்த விசயங்கள் தெரிந்திருந்தும், எல்லாம் அறிந்திருந்தும் அதைப்பற்றி வாய் திறக்காமல் இருந்ததால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையே கட்டம் கட்டப்போவதாகவும் ஹேஷ்யங்கள் உலாவருகின்றன.
கைது செய்யப்பட்டவுடன் நள்ளிரவிலும் கூட, பதறியடித்ததுக்கொண்டு , செந்தில் பாலாஜியை காண வாரிசு அமைச்சர் முதல், சபரீசன், ஸ்டாலின், வரை எல்லோரும் ஓடோடிச் சென்று சந்தித்தது இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கிறதே.
இது ஒருபுறம் என்றால், அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துதுறையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கல்லா கட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை தொக்காக தூக்கவும் திட்டங்கள் இருக்கிறதாம்..
அப்படியே உள்ளாட்சித்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக கே.என்.நேரு மீதும், பொதுப்பணித்துறையில் தரமற்ற சாலைகளை போட்டதாக அமைச்சர் ஏ.வ.வேலு மீதும் எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆவணங்களை திரட்டுவதாகவும் சோர்ஸ்ஸஸ் சொல்கின்றன…
இருங்க இருங்க இன்னும் லிஸ்ட் இருக்கு… சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வாங்குவதில் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாகவும், மருத்துவர்கள் & செவிலியர்கள் நியமனத்தில் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரிக்க மிக கனமான அழுத்தமான ஆவணங்கள் சிக்கியிருப்பதால், அவரும் சிக்கப்போகிறார் என்று கணித்துச் சொல்கின்றனர் பலரும்…
இப்படி தனது அரசின் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதை கண்டுகொள்ளாமல், சிபிஐ விசாரிக்க வரவேண்டும் என்றால் முதலில் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் சட்டம் போட்டிருக்கிறார்.. அட திடீர்ன்னு இது எதுக்கு? என்ற கேள்வி எழலாம்… ஏற்கனவே மெட்ரோ ஊழல் தொடர்பாக முதல்வர் மேலேயே குற்றச்சாட்டு இருக்கிறதே என்று தோன்றினால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..
இப்படி விடியா அரசின் மீது புகார் மேல் புகார்கள் குவிந்தால், ரெய்டு நடந்தால், இனி எந்த அமைச்சருக்கு எந்த இலாக்காவை ஒதுக்குவார் ஸ்டாலின்? ஒவ்வொருவராக தட்டித்தூக்கும் திமுக அமைச்சரவையில் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார்? என்பது தான் அனைவரிடமும் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.