தாத்தா திறந்து வைக்க, தந்தை கூட நிற்க, பேரன் கைதட்டுகிறார்… அட, இதுஒன்றும் குடும்ப விழாவோ,பிறந்தநாள் கேக் கட்டிங்கோ அல்ல… அரசு விழா, அதுதாங்க, தாத்தா ஸ்டாலின் ஹாக்கி மைதானத்ததை திறந்து வைக்க, தந்தை உதயநிதி இது கூட நிற்க பேரன் இன்பநிதி கைதட்டிக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்… ஒரே இன்பமாய் இருக்குதய்யா… திமுகவின் இந்த வாரிசு அரசியல் கூத்தைப் பார்க்கும்போது என்று திமுகவின் சீனியர்களே கடும் காண்டாகி இருக்கும்வேளையில், திமுக என்றாலே குடும்பக்கட்சி வாரிசுக் கட்சி என்று எல்லோரும் விமர்சனம் வைப்பதைக் கேட்டுக் கேட்டு புளித்துப்போய் விட்டது என்று வாய்கூசாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்
திமுகவில் தலைவராக வருவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?….ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு வேண்டுமா?…முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டுமா?…. எழுத்தாளராக இருக்க வேண்டுமா? அட அது எல்லாம் எதுக்கு?… கருணாநிதியின் குடும்பம் ஒரு தகுதிபோதாதா ?
பேரறிஞர் அண்ணா எனும் மாபெரும் ஆளுமை மக்களுக்காக உருவாக்கிய கட்சியை தன் மக்களுக்காக தாரை வார்த்த கருணாநிதியைப் பின்பற்றியே தமிழ்நாட்டின் முதலமைச்சராயிருக்கும் ஸ்டாலின், அடுத்ததாக, தன் வாரிசுக்கே கட்சித் தலைமைப் பதவியையும் பட்டயம் செய்துவைத்துவிட்டார்.. தாத்தாவுக்கு தந்தைக்கும் தான் என்ன சளைத்தவனா? என்று தன் மகனை இன்ட்ரோ கொடுத்திருக்கிறார் உதயநிதி… அட அட அட.. இதுவல்லவோ திராவிட மாடல்…
ஸ்டாலின், உதயநிதிக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் செல்லும் என்று கேட்டால் திமுகவின் சீனியர்களே, யோயோ மோடிற்குப்போய், “இந்தியன் மெஸ்ஸி இன்பா கூடவும் நாங்க தான் ப்ரோ இருப்போம்” என்று இன்பநிதிக்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்க தயாராகி வருகிறார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்..
ஏன் திடீரென்று இந்த பேச்சு என்று கேட்கிறீர்களா? ஒரு அரசு விழாவில் முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் இருப்பது காலம் காலமாக நடப்பதுதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் எப்படி அரசு விழாவில் கலந்துகொள்ள முடியும்? தமிழ்நாடு ஹாக்கி மைதானத்திற்கும் இன்பநிதிக்கும் என்ன சம்மந்தம்? அட, அவர் தமிழ்நாட்டின் மெஸ்ஸிங்க என்றுகூட நீங்கள் வாதாடலாம்… அப்படியே இருந்தாலும், ஹாக்கி மைதானத்திற்கும் இன்பநிதிக்கும் என்னதாங்க சம்மந்தம்?
இருக்கு சம்பந்தம் இருக்கு… மகனுக்கு பட்டாபிஷேம் நடந்தாகிவிட்டது, அடுத்து அன்புப் பேரனுக்கு நடக்கவேண்டாமா? என்ற ஸ்டாலினின் கனவுதான் அது.. தன் மகனைப்போலவே, பேரனுக்கும், இப்போதில் இருந்தே கோச்சிங் கொடுக்கிறார் ஸ்டாலின் தாத்தா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
நான் கருணாநிதியுடன் இருந்தேன், ஸ்டாலினுடன் இருக்கிறேன், உதயநிதியுடன் இருப்பேன், ஏன் இன்பநிதியுடனுமே இருப்பேன் என்று ஏற்கனவே உருகியிருந்தார் சீனியர் அமைச்சர் துரைமுருகன்…. ஆக மொத்தம் மூத்த அமைச்சர்களையே “இங்க வாரிசு அரசியல்தான் பிரதானம், அதுக்குத் தேவ நிதானம்”-னு சொல்ல வச்சிருக்கிறார் விடியா முதல்வர் ஸ்டாலின்.
அரசு விழாவில் அமைச்சர் மகனுக்கு என்ன வேலை? திமுகவின் 4ம் தலைமுறை இன்பநிதி தான் என இப்போதே அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கிறதா? திமுகவிற்கு தலைமையேற்க தயாராகிவிட்டார் 4ம் தலைமுறைத் தலைவர் இன்பநிதிதான் என்று உபிஸ்க்கு உரக்கச்சொல்லியிருக்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்தினர்.