இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை கரித்துக்கொட்டும் உடன் பிறப்புகள்!

 

“30 லட்சம் ரூபாய செலவு பண்ணி என் மனைவிய கவுன்சிலரா ஆக்கியிருக்கேன்… எனக்கு இதுவரைக்கும் நகராட்சி வேலைகூட யாரும் தர்றதில்ல… கட்சி சார்பான நோட்டீஸ்ல கூட என் பேரு இல்ல” என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் திண்டிவனத்து திமுககாரர் ஒருவர்.

அதுவும் அத்தனை கட்சிக்காரர்களும் கூடியிருக்கும் செயல் வீரர்கள் கூட்டத்திலேயே அமைச்சர் மஸ்தான் முன்னிலையிலேயே இந்தளவுக்கு புலம்பியிருக்கிறார் என்றால் மனதிற்குள் எத்தனை புலம்பல்கள் இருக்கும் ? வடக்கே இப்படி என்றால் மேற்கே திமுகவின் மாவட்ட செயலாளர் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், ஸ்டாலின் முதல், அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் என்று ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியால் பயனடைபவர்கள் என்று வகைதொகையில்லாமல் எல்லாரையும் வறுத்தெடுத்திருக்கிறார்.

கோவை மாவட்டத்தின் முன்னாள் துணைமேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தன் இனிமையான குரலில் இப்படி திமுகவை கழுவிக்கழுவி ஊத்தியிருப்பது தான் இன்று கோயமுத்தூர் முழுக்க ஹாட் டாக்கே..

மேற்கே இந்தப் பஞ்சாயத்து என்றால் தெற்கே, தென்காசியிலோ, அட துயரத்த இப்படி எல்லாமா நடக்கும்? என்று கேட்கும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார்கள் திமுகவின் மகளிரணியினர்… , மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து, நடந்த ஆர்ப்பாட்டத்தில், மொதல்ல திமுகவின் தென்காசி மாவட்ட கழகத்தில் பெண்களுக்கு நடக்கற கொடுமைகளுக்கு ஏதாவது செஞ்சுப்புட்டு அடுத்தாப்புல அங்க மணிப்பூர பாருங்கன்னு, போராட்ட மேடையிலேயே வெடித்து தள்ளியிருக்கிறார் திமுகவின் மகளிரணி நிர்வாகி…

இப்படி, நாலாத் திசைகளிலும், திமுகவினராலேயே கழுவிக்கழுவி ஊற்றப்பட்டும், தூற்றப்பட்டும் நாறிப்போய் கிடக்கிறது இந்த விடியா ஆட்சி… ஆட்சிக்கு வந்ததும் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, மக்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், இப்படி 10 ஆண்டுகாலமாக கட்சிக்காக உழைத்த உடன்பிறப்புகளையே கறிவேப்பிலையாக நடத்துவதை எண்ணி அணுதினமும் புழுங்கிக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு ஆறுதல் சொல்வதா? இல்லை, ஹப்பாடா இனி அடுத்தமுறை ஆட்சி என்பதை திமுக கிஞ்சித்தும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இப்போதே கட்சியினர் மத்தியல் செல்வாக்கை இழந்துவிட்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுவதா என்று தெரியவில்லை…

ஆக, மக்கள் நம்பிக்கையை இழந்த திமுக, தற்போது தன் சொந்த கட்சிக்காரர்களிடமும் நம்பிக்கையை இழந்துவிட்டதா? சொந்தக் கட்சியினரைக்கூட கட்டிக்காத்து வைத்துக்கொள்ளத் தெரியாமல், தேசிய அரசியலில் கூட்டணி கட்ட ஸ்டாலின் முயல்வது ஏன்? ஆக மொத்தம் கடைகோடியில் இருக்கும், பூத், வார்டு, ஒன்றிய நிர்வாகி முதல் மாவட்ட செயலாளர் வரை சொந்தக்கட்சியினரின் நம்பிக்கையைக்கூட இழந்துவருகிறார் ஸ்டாலின் என்ற உண்மையை அவரிடம் யார் தான், எப்போதுதான் எடுத்துச்சொல்லி விளங்கவைக்கப்போகிறார்கள் என்பதுதான் விடையே இல்லாத கேள்வி.

Exit mobile version