இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! எந்தக் கட்சிக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – பொதுச்செயலாளர் அதிரடி பேச்சு!

தொடர்ந்து அண்ணா திமுகவை அடிமை என விமர்சித்து வந்த விடியா திமுக அரசின் முதல்வரான ஸ்டாலினுக்கு நேற்றைய சேலம் கூட்டத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.

அதிமுகவினர் யாருக்கும் அடிமையாக இருப்பவர்கள் இல்லை என்றும், கொள்ளையடித்த பணத்தையும், ஊழல்களையும் மறைக்க ஸ்டாலினும், திமுகவினரும் தான் சிலருக்கு அடிமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்காக யாரையும் பகைக்கவும், ஓரங்கட்டவும் தயாராக இருக்கும் முதல்வர் ஸ்டாலின், திமுகவில் உள்ள பல சீனியர்களையே ஓரங்கட்டி வைத்துவிட்டார்.

தினமும் மக்களை சுரண்டி எப்படி பணம் சம்பாதிக்கலாம், எப்படி கொள்ளையடிக்கலாம், அதை எங்கு கொண்டு போய் பதுக்கலாம், அதற்கு யாரை காவல் வைக்கலாம் என்றெல்லாம் சிந்திப்பது மட்டும் தான் அவரது தினசரி வேலையாகவே இப்போதெல்லாம் இருந்து வருவதாக சொல்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.

1996ம் ஆண்டு அதிமுக தோல்வியை சந்தித்த போதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடுமையான சட்ட சோதனைகளை சந்தித்தபோதும் கூட, அதிமுக எந்தவிதத்திலும் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார் செல்வி.ஜெ.ஜெயலலிதா.

1999ம் ஆண்டு பாஜக உடன் கூட்டணி வைத்து, அதன் பிறகு சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல 2004 ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் உடன் பயணித்து, தொடர்ந்து 14 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சியில் கூட்டணி கட்சியாக அங்கம் வகித்தது திமுக. ஆனால் அந்த காலகட்டத்தில் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்த ஒரு நற்பயனும் ஏற்படவில்லை.

2014ல் 37 தொகுதிகளில் வென்ற அதிமுக, மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து சேர்த்தது. மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்தால் மட்டும் தான், மாநிலத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஆனால் மாநில தேவை பற்றி எல்லாம் கவலைப்படாமல், கொள்ளையடிப்பதில் மட்டுமே முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்துவதால், அவருக்கு அதுபற்றி எல்லாம் கவலை இருக்காது.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 2ஜி வழக்கை காட்டியும், ரெய்டுகளை நடத்தியும், திமுகவிடம் இருந்து 63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்தபோது அடிமைபட்டுக் கிடந்தது யார்?

தன் கட்சி அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்தால், அவர்களை உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கி, சட்ட விசாரணைக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டது அதிமுக. ஆனால், தன் கட்சி அமைச்சர் ஊழல் செய்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது திமுக.

தற்போது கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடமும், மத்திய அரசிடமும் அடிமைபட்டுக்கிடக்கும் திமுக, மக்கள் பிரச்சனைகளுக்காக முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறதா?

தமிழக அரசியலின் வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசும் திமுக அரசு தான். காங்கிரஸிடம் இன்று வரை அடிமைப்பட்டுக் கிடக்கும் திமுக, ஊழல் செய்யும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்க திராணியற்று கிடக்கும் அதன் தலைவரான முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு, அதிமுகவை பற்றி பேச தகுதி இருக்கிறதா என்கிற கேள்வியையே தற்போது அதிமுகவினர் எழுப்புகின்றனர்

Exit mobile version