இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! புழல் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் செந்தில்பாலாஜி!

புழல் சிறையில், எந்தக் கைதிக்கும் இல்லாத வகையில் ஒரே ஒரு கைதிக்கு மட்டும், வாரத்திற்கு 3 நாட்கள் சிக்கன், பால், பழம், ஃபேன், கட்டில் – மெத்தை என சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் எல்லாம் சிட்டாய் பறக்க… யாருங்கோ அந்த கைதி ? எனுக்கே அவரே பாக்கணும் போல இருக்கே என்ற ரமணா பட வசனம் தான் சமூகவலைதளம் முழுக்க ஒரே பேச்சு..

அவர் யார் தெரியுமா? கைதி எண், 001440 – இத எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? ஆம் ஆம்… இது அதுல்ல என்று நீங்கள் நினைப்பது புரிகிறது…
காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ஷிப்ட் ஆகியிருக்கும் இலாகா இல்லாத மந்திரி செந்தில் பாலாஜிக்குத்தான் இத்தனை வசதிகளும் … அதுவும் புழல் சிறைச்சாலையில் ….

வளையலை விற்று, அன்றாட தேவைகளை குறைத்துக்கொண்டு எப்படியாவது அரசுப் பணி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்கள், இன்னமும் தங்களுக்கு பணமும், நீதியும் கிடைக்கும் என்று தவித்துக்கொண்டிருக்க, குற்றம் செய்தவரோ சொகுசாக சிறையில் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. ஆட்சி இப்படி இருந்தால், நீதி எப்படி கிடைக்கும்?

இப்படி உச்சநீதிமன்றத்தாலேயும், உயர்நீதிமன்றத்தாலுமே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை இன்னமும் தனது அமைச்சரவையில் இலாகா இல்லாமல் வைத்துக்கொண்டு இருப்பதோடு, அவருக்கு பர்ஸ்ட் கிளாஸ் வசதிகளையும் சிறையில் ஏற்படுத்தித்தருகிறது ஒரு அரசு.. அதுவும் சிறையில் இருக்கும் மருத்துவமனையை ஆல்டர் செய்து வசதிகளைத் தருகிறது ஒரு அரசு என்றால், அந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்ததை நினைத்து தலையில் அடித்துக்கொள்வதா? அல்லது இன்னும் என்னவெல்லம் நாம் பார்க்கவேண்டி வருமோ என்று அங்கலாய்த்துக்கொள்வதா?

ஒருவேளை, திமுக அமைச்சர்கள் கைதாவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான், சிக்கன், முட்டை என்று சிறைச்சாலைகளில் தரமான உணவு வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறாரா விடியா முதல்வர் ஸ்டாலின் ? என்ற கலாய் மீம்ஸ்கள் எல்லாம்கூட உலா வருகின்றன..

சோற்றுக்கு வழியின்றி, காய்கறி வாங்கமுடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்க, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் சரி செய்ய திராணியற்ற இந்த அரசு, செந்தில் பாலாஜியை இன்னமும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பது ஏன்? ஒருவேளை அவரிடம் உள்ள சிதம்பர ரகசியம் கசிந்துவிடக்கூடாது என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறதா ?செந்தில் பாலாஜிக்கு மட்டும், சொகுசு அறை ஒதுக்கப்பட்டு ஸ்பெஷலான கவனிப்பை சிறை நிர்வாகம் கொடுப்பது ஏன்? சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு சலுகைகள் எதற்கு? என்ற கேள்விகள்தான் தற்போது தமிழக மக்களின் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.

Exit mobile version