இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பொன்முடி வீட்டு இரும்பு பெட்டியில் இன்னும் இருப்பது என்ன?

அன்று சாதாரண கல்லூரி விரிவுரையாளர்… இன்று ஊர் முழுக்க இருக்கும் பல்வேறு கல்லூரிகளுக்கு சொந்தக்காரர்.. அதுவும் ஏக்கர் கணக்கில் வளைத்துப்போட்டு கோடிக்கணக்கில் கொட்டிக்குவித்திருக்கிறார் ஒருவர்… அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை… சாட்ஷாட் நம் அமைச்சர் பொன்முடிதான் சுமார் ஆயிரம் ஏக்கர்கள் நிலம்… இந்தோனேஷியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் தொழில் முதலீடு என்று ஏதோ பரம்பபரை தொழில் அதிபர்போல கோடான கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறது அமைச்சர் பொன்முடியின் குடும்பம் என்ற செய்திகளைக் கேட்டவுடன் மக்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்..

அமைச்சர் பொன்முடி இல்லத்தை வளைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரையும், அவர் மகன் கௌதம சிகாமணியையும் விசாரணை செய்ததுடன் அவர்கள் வீட்டில் இருந்த பீரோ, லாக்கர், இரும்பு பெட்டிகளில் உள்ள ஆவணங்களை சோதனையிடுவதற்காக சாவி கேட்டால், சாவி கொடுக்க மறுத்திருக்கிறார் பொன்முடி, பின்னர் வேறு வழியின்றி, போலி சாவி தயாரிப்பவரை வரவழைத்து, லாக்கர், இரும்புப்பெட்டிகளை திறந்திருக்கின்றனர் அமலாக்கத்துறையினர்.. அமைச்சர் வீட்டில் இருந்த அந்த இரும்புப்பெட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதை அரிக்கும் கேள்வி…

பொன்முடி வீட்டில் இருந்து இதுவரையில், 60 லட்சம் ரொக்கமும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லண்டன் யூரோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் இன்வெஸ்ட் செய்த விவகாரங்கள் எல்லாம் வெளியே கசிந்ததால், பொன்முடி குடும்பத்தினரின் வங்கிக்கணக்கில் இருந்த 48 கோடி ரூபாய் வைப்புத் தொகையை முடக்கிவைத்துள்ளது அமலாக்கத்துறை… அது மட்டுமில்லாமல், அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு சொகுசு கார்களையும் அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்….

ஒருபக்கம் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் எங்கே ஆட்சி பறிபோய் விடுமோ என்று கதிகலங்கிப்போய் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள இரும்புப்பெட்டியை உடைத்தால் அதில் இருக்கும் ஆவணங்களால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்றெண்ணி அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாக விஷயத்தை கசியவிடுகின்றனர் அறிவாலய உடன்பிறப்புகள்..

அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, அவருடைய உறவினர் என்று ஒட்டுமொத்த பொன்முடி குடும்பமும் இவ்வளவு சொத்துகளை குவித்தது எப்படி? செம்மண் அள்ளியதில் தொடங்கி, இந்தோனேசியாவில் குவாரிகள் வாங்கியது, அரபு நாடுகளில் முதலீடுகள் செய்ததற்கு கோடான கோடி ரூபாய்கள் எல்லாம் வந்தது எப்படி?

விடியா திமுக அரசுக்கே பயம்காட்டிய, அமைச்சர் வீட்டில் உள்ள அந்த இரும்புப் பெட்டியில் இருப்பது என்ன? அந்த பெட்டியைத் திறந்தாலோ, செந்தில்பாலாஜி வாய் திறந்தாலே திமுக ஆட்சிக்கு ஆபத்தா? என்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.

Exit mobile version