இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில்பாலாஜியின் ஆட்கொணர்வு மனுவை நிராகரித்த நீதிமன்றம்! அடுத்தது என்ன?

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ,அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்தும், காவலில் எடுப்பதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நீதிபதிகள் நிஷா பாணு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருவேறு தீர்ப்புகளை அளித்தது. இதனால் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மூன்று நீதிபதிகள் அமர்வில், செந்தில் பாலாஜியின் மனைவி சார்பில் பல லட்சங்கள் செலவு செய்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலை வாதாட வைத்தது திமுக. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக கூறி தீர்ப்பளித்திருக்கிறார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி ஆகியிருக்கிறது.

இந்த தீர்ப்பின் மூலம், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் இப்போதே திமுக தலைமை பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்திய அதே ஸ்டாலின், இன்று அதே செந்தில் பாலாஜியை கைதியாக நீதிமன்றம் அறிவித்த பின்னரும், அமைச்சரவையில் அவரை தக்க வைக்க ஆளுநருடன் வார்த்தை மோதலில் ஈடுபடடு வருகிறார். இதற்கு காரணம் எங்கே விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜியை வாயை திறந்தால், மொத்தமாக நாம் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் ஸ்டாலின் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட உள்ள செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சி கலைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும், சிகிச்சை முடிந்து அமலாக்கத்துறையின் விசாரணையால் மேலும் சிக்கலில் சிக்கப்போகிறார் செந்தில்பாலாஜி என்பதே
உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Exit mobile version