ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவது புது திட்டங்கள் வருமா? மேம்பாலம் வருமா? மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஏதாவது வளர்ச்சி வருமா என்று எதிர்ப்பார்ப்பார்கள் மக்கள்… ஆனால், இந்த விடியா திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எந்தத்துறையில் ரெய்டு வரப்போகிறது? எந்த அமைச்சர் ஜெயிலுக்குப் போகப்போகிறார்? எத்தனை ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் ? என்று அறிந்துகொள்ளத்தான் ஆவலாய் இருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்… அந்த வகையில், டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டுக்கு பிறகு தற்போது வசமாய் சிக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மற்றும் திருச்சியில் அரசு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதில் சுமார் 3ஆயிரம் கோடி , 2 ஆயிரம் கோடி என்று கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது…. இது ஒன்றும் பேங்கில் இருந்து எடுத்தார்கள் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள்… இந்த 3000 கோடி , 2 ஆயிரம் கோடி எல்லாம் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் இருந்து எடுத்திருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள்..
திருச்சி உறையூர், சென்னை செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள ரெஜிஸ்டர் ஆபீஸ்-ல் இவ்வளவு கோடி ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள் என்றால், பெரிய பெரிய நகரங்களில், மாநகராட்சிகளில் எல்லாம் என்ன கணக்கு என்று நீங்களே கூட்டிக்கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்..
தமிழகத்தில் உள்ள பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான் கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவது, எந்த பத்திரப்பதிவு என்றாலும் அதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் என்று தொடர் முறைகேடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.. சரி இதற்கும் அமைச்சர் மூர்த்திக்கும் என்னப்பா சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.. இருக்கிறது சம்பந்தம் இருக்கிறது… சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஊலே மெச்சும் அளவுக்கு பிரம்மாண்ட கறி விருந்தோடு ஒரு கல்யாணம் நடந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதா? இது என்ன கல்யாணமா இல்லை மாநாடா என்று முதல்வர் ஸ்டாலினே ஆச்சர்யப்படும் படி நடந்த கல்யாணத்திற்கு சுமார் 95 கோடி ரூபாயை செலவழித்தார் ஒரு அமைச்சர் ஆம்… ஷாட்ஷாத் மூர்த்தியே தான்…
ஒரு கல்யாணத்தில் கோடிகோடியாய் செலவழிக்க எங்கிருந்து வந்தது இவ்வளவு கோடி? எல்லாம் பத்திரப்பதிவுத்துறையின் கைங்கர்யம் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.. அதுமட்டுமின்றி, செந்தில்பாலாஜி போல, சம்பாதித்த காசில் பங்கை ஸ்டாலின் குடும்பத்திற்கும் கொடுத்ததால்தான் மதுரையில் அவருடன் மோதிய முன்னாள் நிதியமைச்சர் பிடிஆரையே வேறுதுறைக்கு மாற்றியதாகவும் திமுகவின் உள்வட்டாரங்களில் கருத்துக்கள் வட்டமடிக்கின்றன…
டாஸ்மாக்கை தொடர்ந்து கட்டம்கட்டப்படுகிறதா பத்திரப்பதிவுத்துறை? பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் கோடி கோடியாய் புரளும் லஞ்சப்பணம் யாருக்கு செல்கிறது?செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து வசமாய் சிக்கப்போகிறாரா அமைச்சர் மூர்த்தி? என்பதுதான் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் கே.
Discussion about this post