இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமா என்ற அச்சத்தில் ஸ்டாலின்! டெல்லியில் கவர்னர்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய கோப்புகளோடு டெல்லியில் முகாமிட்டு இருக்கும் நிலையில், தனது ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாரா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

டெல்லி என்று யாராவது சொன்னாலே போதும் திக் திக் என்றிருக்கிறது திமுகவினருக்கு… எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கின்றனர் திமுகவினர்… டெல்லி என்றால் திமுகவிற்கு ஏன் இந்த பதற்றம்?… காரணம் இருக்கிறது… தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் டெல்லி பயணத்தால் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் என்கின்றனர் உண்மை தெறிந்தவர்கள்….

சமீபத்தில் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்தே கிலி பிடித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி மாட்டிக்கொண்டால், எங்கே தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தின் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாரோ என்ற கேள்விதான் எழுகிறது…

((தானும், தன் குடும்பத்தினரும் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி
செய்துவரும் ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் தான் இதற்கு காரணமாக மாறியிருக்கிறது. ))

செந்தில் பாலாஜியை அதிரடியாக நீக்கிய தமிழக ஆளுநர், இது தொடர்பாக எந்த சட்ட சிக்கலும் எழுந்துவிடக் கூடாது என்பதால் அட்டர்னி ஜெனரலின் கருத்துக்களுக்காக, அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார்.

ஆளுநரின் டெல்லி பயணத்திற்கான முழு காரணங்களும் இன்னும் தெரியவராத நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்திருந்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த அறிவிப்பில், அது ஒரு பயனுள்ள சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப்பிறகு தான் தற்போது பதற்றத்தில் உளறத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சமாளித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.

கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத நிலையில், அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சம் தான் அவரை இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது.

ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டால், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதோ என்ற ஸ்டாலினின் அதீத அச்சம் தான் தற்போதைய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர் பலரும்…
ஆளுநரின் டெல்லி பயணத்தை பார்த்து பயந்து, நடுங்கிக் கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை மாற்றக் கோரி பதறியடித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லிக்கு சென்ற ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்ததால்தான் கலக்கத்தில் இருக்கிறார்களா திமுகவினர்? ஆளுநரை நீக்க, குடியரசுத்தலைவருக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதி அனுப்பியது ஏன்?
ஆக மொத்தத்தில் ஆட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

Exit mobile version