இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அமலாக்கத்துறை கண்ட்ரோலில் செந்தில்பாலாஜி! அடுத்தது புழலா? திகாரா?

திமுக ஆட்சியை எந்தக்கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கெத்தாக பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினின் ஆசையில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு…

கபில் சிபல், முகுல் ரோஹத்கி என்று நாட்டிலேயே உச்சபட்ச கட்டணம் வாங்கும் சுமார் 18 முன்னணி வழக்கறிஞர்களை செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக களத்தில் இறக்கிவிட்டது திமுக.. ஆனால் எத்தனை தீயசக்திகள் ப்ளான் செய்தாலும் நீதிசாகுமா? நீதியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த, ஏமாந்துபோன மக்களுக்கு ஆறுதல் தரும் அளவிற்கு உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த உத்தரவைக் கேள்விப்பட்டதும் கதிகலங்கிப்போயிருக்கிறது திமுக…

இதில் சிறப்பே என்னவென்றால், செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொன்ன கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுநாளான இன்று அவருடைய ஆசை நிறைவேறியிருக்கிறது என்று அறிவாலயத்து உடன்பிறப்புகளே உள்ளூர உச்சுக்கொட்டுகிறார்கள்…

ஆனால், தங்கள் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை, செந்தில்பாலாஜி மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றெல்லாம் வீடியோவில் வீர வசனம் பேசிய ஸ்டாலின் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? என்பது ஒருபுறம் என்றால், 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தால் என்னென்ன ரகசியங்கள் எல்லாம் வெளிவரப்போகுதோ ? என்று திமுகவினரின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது இந்த இந்த தீர்ப்பு…

பிடிஆரின் 30ஆயிரம்கோடி ஊழல் ஆடியோ விவகாரம், அதற்கு பிறகு அவருக்கு நடந்த துறை மாற்ற நடவடிக்கை, செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவு போன்ற இந்த தொடர்நிகழ்வுகளை கூட்டிக்கழித்துப் பார்த்தால், திமுகவினரின் இந்த பயம், ஸ்டாலின் குடும்பத்தினரின் பயம் என்று எல்லோரும் பயப்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம்…

மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, இலாகா இல்லாத மந்திரியாக, புழல் சிறையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பைனாப்பிள் கேசரி பிரியர் அமைச்சர் செந்தில்பாலாஜியை இனி எப்படி விசாரிக்கப்போகிறது அமலாக்கத்துறை? புழல் சிறையிலேயே வைத்து விசாரிக்குமா? அல்லது ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய ஆம்ஆத்மி அமைச்சர்களை விசாரிக்கும், திகார் சிறைக்கு அழைத்துச்சென்று விசாரிக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியே.

Exit mobile version