தமிழக அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் காரணமாக தொடரும் மரணங்கள்… தென்மாவட்டங்களில் நிகழும் சாதிய ரீதியிலான படுகொலைகள்… தமிழகம் முழுவதுமே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியில் சிக்கி அரங்கேறும் கொலை, கொள்ளை, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள்… என நாள்தோறும் தமிழகத்தில் வன்முறைகள் நிகழாத நாளே இல்லை.
இது ஒருபுறம் என்றால் நீட்டை ஒழிக்க முடியாமல் வெற்றுக் கூப்பாடுக்காக உண்ணாவிரதம், விவசாயிகளின் குரல்வலையை நெரிக்கும் வகையில் என்.எல்.சிக்கு விஸ்தரிப்புக்கு ஆதரவு, காவிரி நதிநீர் விவகாரத்தில் கள்ள மவுனம்…. என முதுகெலும்பில்லா ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது விடியா திமுக…
அதே நேரம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தங்களது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது தொடங்கி, அதிமுக மாநாட்டைப் போல தாங்களும் மாநாடு நடத்துவதாக அறிவிப்பது என்று திரிசங்கு சொர்க்கத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது திமுக.
வெற்றுவிளம்பரங்களை மட்டுமே மக்களிடையே பரப்பி அதனை நாடாளுமன்ற தேர்தலில் வாக்காக அறுவடை செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது ஆளும் அரசு. ஆனால் அது எதுவும் நடக்கப் போவதில்லை… நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நாட்டையே தங்கள் கோட்டையாக்கிவிடலாம் என்று கனவு கோட்டையை கட்டிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தை ஆளவே ததிகினத்தோம் என ஆடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை தேசிய அரசியலிலும் தெரியத்தான் போகிறது. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் இந்தியாவையே காப்பாற்றப்போகிறாரா என்றும் விளாசித் தள்ளியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்…
தமிழ்நாட்டில் இருக்கும் பல சிக்கல்களை தீர்க்கத் தெரியாமல் திணறும் ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஊருக்கெல்லாம் வெளிச்சமாகப் போகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்….