பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்துக்குப் பணமில்லை… அம்மா மகளிர் இருசக்கரவாகனத் திட்டத்துக்குப் பணமில்லை… இப்படியெல்லாம் பெண்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களுக்கு எல்லாம் பணமில்லை…. பணமில்லை என்று கையை அகல விரித்ததுதான் இந்த விடியா திமுக அரசு….
அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்காமல் ஏமாற்றி…. தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கான மகளிரின் குமுறலுக்கு ஆளாகி உள்ளது. அதிலும், இந்த திட்டத்துக்கும் பணமில்லாமல் எஸ்.சி. எஸ்.டியினருக்கான நிதியில் இருந்து 1500 கோடிக்கும் மேல் நிதியை எடுத்துள்ளது விடியா அரசு. இன்னொரு பக்கம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லாததால் அந்த திட்டத்தையும் கைவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
அதே போல, நிதிப்பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கப்படாததால் அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அவர்கள்.
இப்படி மக்கள் நலனுக்கான எந்த திட்டத்துக்கும் இந்த அரசிடம் நிதியில்லை…. அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் போட நிதியில்லை… ஆனால் இந்தியாவிலேயே, மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம்.
இந்த கடன் தொகையெல்லாம் என்ன ஆனது என்பது ஆளும் திமுகவுக்கும், அதன் அதிகார மையங்களுக்கே வெளிச்சம்.
நிதியில்லாத இந்த ராஜ்ஜியத்தில் எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பதற்கு மட்டும் 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடலில் அமைக்கப்படும் இந்த சிலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியான நிலையில், மத்திய அரசும் விதிமுறைகளோடு அனுமதி அளித்துள்ள நிலையில், இதோ பேனா சிலையின் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவி ட்டதாக அறிவித்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
மக்களுக்கும், மாணவர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு, பேனா சிலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி கிடைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.
மக்களைப்பற்றி துளியும் கவலைப்படாமல், 81 கோடி ரூபாய்க்கு தன் தந்தையின் புகழ்பாடுவதில்தான் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாரா?
மத்திய அரசிடம் கடன் பெறுவதெல்லாம் இத்தகைய வீண் விளம்பரங்களுக்காகத்தானா? நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்துவிட்டு தனது குடும்பப் பெருமையை பேச வீண் விளம்பரம் செய்வதுதான் ஸ்டாலினின் திட்டம் என்கிறார்கள் விடியா அரசின் செயல்பாடுகளை கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள்.