இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! விலையில்லா மடிக்கணினி இப்பொதைக்கு இல்லை என்று சொல்லும் அன்பில் மகேஷ்!

வாழ்க்கையில் கம்யூட்டரையே பார்க்காத, அப்படி பார்க்கவேண்டுமானால் டவுனுக்கு போகவேண்டும் என்ற நிலையில் இருந்த குக்கிராமங்களின் மாணவ மாணவிகளின் மடியில் மடிக்கணிணியை தவழ விட்டவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா… ஒரு தாய்க்குத்தானே தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று , என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திய புரட்சித்தலைவி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களின் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் லேப்டாப் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறது இந்த விடியா அரசு..

இது எல்லோருக்குமான அரசு…..வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று நீட்டி முழக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் 2021ல், கொரோனாவை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்தி வைத்தது, பிறகு 2022ல், அப்போது-இப்போது என்று மொக்கை காரணங்களை காட்டி இழுத்தடித்தது.. இதோ லேப்டாப் வந்துவிடும் அதோ வந்துவிடும் என்று ஆசைஆசையாய் காத்துக்கொண்டிருந்த மாணவர்களின் கனவில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது இந்த விடியா அரசு..

தன் சொந்த பேரன் வெளிநாட்டில் விளையாடப்போனால் விமான நிலையத்திற்கே சென்று வழியனுப்பும் அளவுக்கு அக்கறை மிகுந்த தாத்தாவாக இருக்கும் ஸ்டாலின், தமிழகத்தில் இருக்கும் கோடான கோடி குழந்தைகளின் கனவை சிதைப்பது ஏன்?

நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி காசு வரும்போது லேப்டாப் கொடுப்போம் என்ற பேசியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி… பொய்யா மொழியாரே இப்படி பொய் பேசுவது நியாயமா? என்று குமுறுகிறார்கள் பள்ளிக்குழந்தைகள்…

மணிப்பூருக்கு உதவ நாங்க கோடிக்கணக்கில் பணம் பொருட்களை அனுப்புகிறோம் அதற்கு அனுமதி கொடுங்க என்று இங்கிருந்து கடிதம் எழுதும் இந்த விடியா அரசு, அந்தக்காசிலாவது நம்மூரு பிள்ளைகளுக்கு லேப்டாப் கொடுக்கலாம் என்று ஏன் எண்ணவில்லை? கொஞ்சமாவது நம் பிள்ளைகள் மீது அக்கறை இருக்கவேண்டுமல்லவா?

தாலிக்குத் தங்கத்தை நிறுத்தி விளிம்புநிலைப் பெண்களுக்கு தங்கம் கனவாகவாக மாற்றிய இந்த விடியா அரசு, அம்மா உணவகத்தை வஞ்சம் வைத்து அழிக்க நினைக்கும் இந்த வஞ்சக அரசு, அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகங்களை இழுத்து மூடிய இருமாப்பு கொண்ட அரசு இன்று பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய லேப்டாப்பையும் தடுத்து நிறுத்தி மாணவர்களின் கோபத்திற்கும் ஆளாகிஇருக்கிறது…

ஒவ்வொரு ஆண்டும் லட்சங்கோடிகளை கடனாக வாங்கிவிட்டு, எதற்கெடுத்தாலும் காசில்லை, காசில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த அரசு, வாங்கிய கடனை யார் வீட்டில் வைத்திருக்கிறது? கிராமப்புற மாணவர்களின் கனவுத்திட்டமான லேப்டாப்பை வழங்காமல் இழுத்தடிக்கும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டப்போகிறார்களா வருங்கால வாக்காளர்கள்? அதிமுக கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தி வைக்கத்தான் ஆட்சிக்கு வந்ததா விடியா திமுக அரசு பொங்கும் மக்களின் வயித்தெறிச்சலையும் பாவத்தையும் எங்கே கொண்டுபோய் கரைக்கப்போகிறது இந்த அரசு?

Exit mobile version